கண்டி, போகம்பறை சிறைச்சாலை வளாகம் கலாச்சாரத்தை பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடியவகையில் புனரமைக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கண்டி, போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மிக பழமைவாய்ந்த போகம்பறை சிறைச்சாலையின் புனரமைப்பு பணிகள் குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம் கண்டியில் தங்கியிருக்கக்கூடிய வகையில் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம் பெற்றதாக குறிப்பிட்ட அமைச்சர் கண்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஓரிரு தினங்கள் மட்டுமே கண்டி விடுதிகளில் தங்கி வெளியேறுகின்றனர்
இந்த நிலையை மாற்றி கண்டி கிராமங்களில் உள்ள சுற்றுலா இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்குமிடையில் நீண்ட கால தொடர்புகள் இருக்கக்கூடிய பரிவர்த்தனை இடமாக போகம்பறை சிறைச்சாலை புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்