யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் 26வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி. ஜெ.கொடித்துவக்கு ஆர்.டபிள்யு.பி ஆர்.எஸ்.பி என்.டி.யு சிரேஸ்ட அதிகாரி அவர்கள் இன்று (19) சம்பிரதாயபூர்வமாக சமய சடங்குகளுடன் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அத்துடன் இராணுவ அணிவகுப்பினை 11வது இலங்கை காலாட் படையினர் வழங்கி புதிய கட்டளைத் தளபதி அவர்களை வரவேற்றதுடன் மகிழ்சியளிக்கும் முகமாக கட்டளைத் தளபதி அவர்களால் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் முன் பகுதியில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
இந் நிகழ்வின்போது சர்வ மதத் தலைவர்கள், 51, 52 மற்றும் 55வது காலாட் படை தலைமையகங்களின் தளபதிகள், சேனைத் தளபதிகள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.