தேசிய சிறுநீரக நோய்த்தடுப்பு மற்றும் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சிறுநீரக நோயாளர்களின் பரம்பல் தொடர்பில் GPS வரைபடம் தயாரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல் இன்றைய (20) தினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வைத்தியர் புபுது டி சில்வா, வைத்தியர் அசந்த ரண்சிங்க,ஆகியோர் உட்பட மாவட்டச் செயலக அதிகாரிகள், பிரதேச செயலர்கள்,சுகாதாரதுறையினர், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.