crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் சேதன பசனை தயாரிப்பு தொடர்பில் செயன்முறை பயிற்சி

விவசாய அமைச்சின் கீழ் காலநிலைக்கு சீரான விவசாய செய்கை திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி பண்ணையில் விவசாயிகளுக்கு சேதனப்பசளை தயாரித்தல் மற்றும் இயற்கை விவசாயம் தொடர்பிலான செயன்முறை பயிற்சி வகுப்பு இன்று (20) நடைபெற்றுள்ளது.

சேதன பசனை தயாரிப்பு தொடர்பில் விவசாயிகள் மத்தியில் ஊக்கிவிக்கும் நோக்கில் ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி பண்ணையின் முகாமையாளர் கீ.கீர்த்திகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி யா.சசீலன், வட மாகாண காலநிலைக்கு சீரான விவசாய திட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிபுணர் ஆர்.சஞ்சீவன் உள்ளிட்ட விவசாய போதனாசிரியர்கள் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான இயற்கை விவசாயம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்கள்.

இதன்போது விவசாய செய்கைக்கான இயற்கை உரம் தயாரித்தல், அசோலாபாசி உற்பத்தி, களை நாசினி தயாரித்தல் போன்ற விடயங்கள் செயன்முறையூடக விவசாய போதனாசிரியர்களினால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சேதனை பசளை உற்பத்தியை அரசாங்கம் ஊக்கிவித்து வரும் நிலையில் சேதன பசளை தொடர்பில் விவசாயிகளுக்கான அறிவூட்டும் செயற்பாடுகள் ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி பண்ணையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 + = 66

Back to top button
error: