இலங்கை செஞ்சிலுவை சங்கம் முல்லைத்தீவு கிளையால் மருத்துவ மற்றும் மருத்துவம் சாரா உபகரணங்கள் இன்று (22) முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம்.உமாசங்கர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது,
ஆக்சிஜன் செறிவூட்டீகள், பாதுப்பு முக கவசங்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் உட்பட பல உபகரணங்கள் கொவிட்19 தடுப்பு நடவடிக்கை செயற்பாட்டிற்காக இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவை பணிமனையில் நடைபெற்ற குறித்த பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்க முல்லைத்தீவு கிளை தொண்டர்கள், செயலாளர் செ.சிவராஐா, நிறைவற்று அதிகாரி க.நிதர்சன், மருத்துவர் சத்தியரூபன், உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட கொரோனா சிகிச்சை நிலையங்களுக்காகவும், மருத்துவமனைகளின் சுகாதார செயற்பாட்டிற்காகவும் கொடையாளர்கள் நிறுவனங்கள், அமைப்புக்களிடம் இருந்து தொடர்ச்சியாக சுகாதார பொருட்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.