திருகோணமலை – கிண்ணியா வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு டெப் வழங்கும் நிகழ்வு கிண்ணியா வலயக்கல்விப்பணிமனையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் நேற்று முன்தினம் (24) நடைபெற்றது.
கல்வியமைச்சின் ஏற்பாட்டில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டத்திற்கமைய டெப் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இதன்போது 781 டெப்கள் வழங்கி வைக்கப்பட்டன.