விளையாட்டு மைதான நிர்மானப் பணி தொடர்பான கலந்துரையாடல்
மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியில் அமையவுள்ள பாரிய அளவிலான விளையாட்டு மைதானத்தின் நிர்மானப் பணிகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் (24) வேலூர் பகுதியில் அமையவுள்ள மைதானத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் மைதானத்தின் அமைவிடம் தொடர்பாகவும் எவ்வாறு மைதான கட்டுமான பணிகளை முன்னெடுப்பது என்பது தொடர்பாகவும் குறித்த மைதானத்தினை எந்த விளையாட்டு துறைக்காக அதிகளவில் மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்த மைதானத்தினை பல்வேறுபட்ட விளையாட்டு துறைகளுக்கமைவாக இதனை தயார்படுத்தி அத்துறைகளில் அதிகளவான இளைஞர்களை உள்வாங்க வேண்டும் என்கின்ற ஆலோசனையினை பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் அரச அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார்.
இதே வேளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணை தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளிற்கு இணங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று விளையாட்டு மைதானங்கள் இதேபோன்று புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது