crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டு மாவட்டத்தில் எல்லை நிர்ணயம் செய்வதற்கான உயர் மட்டக்கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான உயர் மட்டக் கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தித்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரமான சி.சந்திரகாந்தன் தலைமையில் நேற்று (25) நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வரவேற்புரையை அடுத்து ஆரம்பமான எல்லை நிர்ணயம் தொடர்பான இக் கலந்துரையாடலில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், நசீர் அஹமட் ஆகியோரும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உருவாகவுள்ள புதிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், அதன் எல்லைகள் தொடர்பிலும், புதிய பிரதேச செயலாளர் பிரிவுகளை ஏற்படுத்துதல், மற்றும் அதிலுள்ள ஏற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஏற்கனவே பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில் இந்த விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. அதே நேரத்தில் ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் மேலும் 3 அல்லது 4 பிரிவுகளை உருவாக்குவதுடன் ஏற்கனவே உள்ள 345 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை 448 ஆக உயர்த்துவது உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் இறுதி முடிவு இன்னும் சில நாட்டகளில் எட்டப்படும் என்று நேற்
றைய கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 77 = 83

Back to top button
error: