டயகம சிறுமி மரண தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனையும் சந்தேகநபராக பெயரிடப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு நேற்று (26) திங்கட்கிழமை அறிவித்துள்ளார்
சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதைக்கப்பட்ட டயகம சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து புதிய சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை பெற வேண்டும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது