crossorigin="anonymous">
உள்நாடுபொது

குருநாகலில் பிராந்திய கொன்சியுலர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது

பிராந்திய கொன்சியுலர் அலுவலகமொன்று நேற்று (27) பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் குருநாகலில் மெய்நிகர் ரீதியாக திறக்கப்பட்டுள்ளது

திறப்பு விழாவில், வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பெருந்தெருக்கள் அமைச்சர் மற்றும் பிரதான அரசாங்க கொறடா ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோ, வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய ஆகியோருடன் மேலும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வடமேல் மாகாணம் மற்றும் அதற்கு அண்மித்த பகுதியிலுள்ள மக்களுக்கான பிறப்பு, திருமணம் மற்றும் மரண சான்றிதழ்கள் முதலியவற்றுடன் வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கேற்ப கல்விச் சான்றிதழ்களை அத்தாட்சிப்படுத்தல், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி வழங்குதல், இழப்பீடுகளை மதிப்பிடுதல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிவாரணங்களை வழங்குதல் மற்றும் வெளிநாடுகளில் மரணமடைந்த இலங்கையர்களின் உடல்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு சேவைகள் இப் பிராந்திய கொன்சியுலர் அலுவலகத்தினால் வழங்கப்படும்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொன்சியுலர் சேவைகளின் உற்பத்தித்திறன் மற்றும் விநியோகத்தை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்ட அரசாங்கத்தின் தேசிய கொள்கைக் கட்டமைப்பான ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ ற்கு உத்வேகம் அளிப்பதற்காக, அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வழிகாட்டுதலின் பேரில் வெளிநாட்டு அமைச்சு 2020 ஜனவரி முதல் பிராந்திய கொன்சியுலர் அலுவலகங்களை தீவு முழுவதும் திறக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

பொதுமக்கள் தமது கொன்சியுலர் சேவைகளைப் பெறுவதற்காக, குறிப்பாக இந் நோய்ப்பரவல் காலத்தில் கொழும்பிற்கு பயணம் செய்ய வேண்டிய தேவையை இல்லாமல் செய்வதற்காக, நாடெங்குமுள்ள பிராந்திய கொன்சியுலர் அலுவலகங்களின் வலையமைப்பு மூலமாக இச்சேவைகளை வழங்கும் நோக்குடன் அமைச்சினால் நிறுவப்பட்டு வருகின்ற பிராந்திய கொன்சியுலர் அலுவலகங்களில் இது புதுவரவாகும் பிற கொன்சியுலர் அலுவலகங்கள் கண்டி, மாத்தறை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

குருநாகல் பிராந்திய கொன்சியுலர் அலுவலகத்திற்கான தொடர்பு விபரங்கள் வருமாறு:

3 ஆம் தளம், நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்புச் சேவைகள், இல. 02 தம்புள்ள வீதி, குருநாகல். தொலைபேசி இல: 037-222 5931, தொலைநகல்: 037- 222 5941, மின்னஞ்சல்: kurunegala.consular@mfa.gov.lk

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 2

Back to top button
error: