கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான பாசிக்குடா கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாகவே குறித்த கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதை தற்காலிகமாக தடை விதித்துள்ளதாக பாசிக்குடா சுற்றுலா பொலிஸ் காவலரன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடற்கரைப் பகுதிக்குள் எவரும் செல்லாத வகையில் தடைபோட்டு பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.