முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பு வீட்டில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்த சிறுமியின் சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.
டயகம தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த சிறுமியின் சடலம் விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் இன்று (30) நண்பகல் இரண்டாவது மரண பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.
மயானத்திற்கு, சிறுமியின் தாயும் தந்தையும் சகோதரரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய, சிறுமியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.
இந்த சிறுமி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது 15.07.2021 அன்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.