crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

வட மாகாணத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதலாம் கட்டவ தடுப்பூசி

வட மாகாணத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதலாம் கட்டவ தடுப்பூசியினை பெற்றுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் .ஆ .கேதீஸ்வரன் (30) தெரிவித்தார்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (30) நடத்திய ஊடக சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

“வட மாகாணத்தில் தற்போது 30 வயதுக்கு மேற்பட்டோர் சைனோபாம் தடுப்பு ஊசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன அந்த அடிப்படையில் நேற்று வடக்கு மாகாணத்தில் 40 ஆயிரத்து 391 பேருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இன்று வரை வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் இருக்கிறார்கள் அவர்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 111 பேருக்கு முதல் கட்டதடுப்பூசி நேற்று மாலை வரை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட 35 வீதமான 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இன்றுவரை வழங்கப்பட்டுள்ளது. அனேகமாக ஓகஸ்ட் மாத நடுப் பகுதிக்கு முன்னர் வட மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கக் கூடியதாக இருக்கும் முதலாம் கட்ட தடுப்பூசியினை வழங்க முடியும்

அதே போல செப்டம்பர் மாத நடுப் பகுதிக்கு முன்னர் இரண்டாவது கட்ட தடுப்பூசியினையும் வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க முடியும் கடந்த இரண்டு தினங்களாக தொறறாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது இறப்புகளும் அதிகரித்து வருகின்றது.

பல மாகாணங்களில் இறப்பு அல்லது தொற்று வீதம் மிக தீவிரமாக காணப்படுகின்றது வடக்கு மாகாணத்திலும் நேற்று 104 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே இந்த சூழ்நிலையில் தொற்று பரம்பலை கட்டுப்படுத்துவதற்கு இறப்புகளை கட்டுப்படுத்துவதற்கும் மூன்று வழிகள் காணப்படுகின்றது.

இயலுமானவரை விரைவாக தடுப்பூசிகளை கூடுதலான மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது, இரண்டாவது பொது மக்கள் கூடுகின்ற இடங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுதல் ,மூன்றாவது பொதுமக்கள் ஒன்று கூடுவதை இயலுமானவரை தவிர்த்தல் . கடந்த இரண்டு வாரங்களாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அவதானித்து வருகிறோம் ஆலயங்களில் சிறிய கொத்தணிகள் கிராமப்புறங்களில் உருவாகி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது

அதேபோல் சில பிரதேசங்களை கூட நாங்க முடக்கி வைத்து இருக்கின்றம் என வடக்கு மாகாண பொதுமக்கள் இந்த கொரோனா ஒழிப்பு செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 91 − = 89

Back to top button
error: