பிரிட்டனில் கோரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது
பிரிட்டனில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பிரிட்டனில் 60% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று சற்று குறைந்தன. இதனைத் தொடர்ந்து அங்கு முழுமையாக கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன
பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடையில்லை. இரவு நேர மதுபான விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் முழுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவது எதிர்காலத்தில் தொற்றை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்தநிலையில் பிரிட்டனில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 31,117 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்தைக் கடந்துள்ளது. 11.83 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் 85 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,515 ஆக உயர்ந்துள்ளனர்.(இந்து)