crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் இது வரை 40,990 பேருக்கு தடுப்பூசிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சினோபார்ம் தடுப்பூசித் ஏற்றும் திட்டம் கடந்த 28ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதிலிருந்து நேற்று (03) வரையான காலப்பகுதியில் 40,990 பேர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கென 50,000 தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை முல்லைத்தீவு சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவில் 11,389 தடுப்பூசிகளும், மல்லாவி சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவில் 4,786 தடுப்பூசிகளும்,

ஒட்டுசுட்டான் சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவில் 6,728 தடுப்பூசிகளும், வெலிஓயா சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவில் 6,399 தடுப்பூசிகளும், புதுக்குடியிருப்பு சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவில் 11,688 தடுப்பூசிகளும் இதுவரை வழங்கப்பட்டுள்ளதுடன் இன்றும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − = 54

Back to top button
error: