crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரச சேவையிலுள்ள கர்ப்பிணிப் பெண்களை கடமைக்கு அழைப்பது இடைநிறுத்தம்

இலங்கையில் அரச சேவையில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிப் பெண்களை கடமைக்கு அழைப்பது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று ஏனைய அரச ஊழியர்களையும் இரண்டு கட்டங்களின் வாரத்தில் 3 நாட்களுக்கு சேவைக்கு அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஒளடத ஒழுங்குறுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிப் பெண்களை அலுவலங்களுக்கு அழைக்காமல் வீடுகளில் இருந்து பணியினை மேற்கொள்வதற்கான சுற்றறிக்கையை வெளியிடுதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அரச நிர்வாக செயலாளர் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிடுவார் என்றும் குறிப்பிட்டார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 − 74 =

Back to top button
error: