crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு – அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் அதிகாரிகளுடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (05) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் இதனை தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்போடு வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் சில நாட்களில் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ளது என்று அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதலை கடைபிடிப்பதில் தவறி உள்ளார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் மீண்டும் மிக இறுக்கமாக சுகாதார நடை முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.

துறைசார் திணைக்கள தலைவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் தமது கையினை கழுவி, சுகாதார நடைமுறையுடன் செயல்பட வேண்டும். போக்குவரத்து துறை சார்ந்தவர்களுக்கு அறிவித்தல்களை வழங்கி உள்ளோம். பஸ்களில் ஆசனத்திற்கு ஏற்ப பயணிகள் பயணிக்க வேண்டும்

பஸ்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் பார்க்க பயணிகளை ஏற்றும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணித்துள்ளோம்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே மக்களை பாதுகாக்க முடியும். அதிகமானவர்கள் முகக்கவசங்களை நாடிக்கு அணிபவர்களாகவே உள்ளனர். எனவே இவ்விடத்தில் கவனம் செலுத்தி, உரிய முறையில் முகக்கவசத்தை அணிவதற்கு மக்களை வலியுறுத்த வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 71 − 62 =

Back to top button
error: