crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

சுகாதாரத்துறையினரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுங்கள்

இன்றைய சூழ்நிலையில் கொவிட் வைரஸ் பரவல் நிலையில் மாவட்ட மக்கள் சுகாதாரத்துறையினரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி நடந்து கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள (07) தெரிவித்தார்.

முகக் கவசம் அணிதல் ,கைகளை கழுவுதல் ,சமூக இடைவெளியை பேணல்,ஒன்றுகூடல்களை தவிர்த்தல், அனாவசியப் பயணங்களிலிருந்து தவிர்ததல் ஆகிய விடயங்களில் கூடிய கவனம் செலுத்துமாறும் அவர் மக்களை வேண்டிக் கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தின் செயற்பாடுகள் எவ்வித பாதகமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுவதாகவும் ஒவ்வொரு கருமங்களை ஆற்றுகின்ற சந்தர்ப்பத்திலும் மக்கள் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படல் வைரசை கட்டுப்படுத்த ஏதுவாக அமையும்.மக்கள் அனைவரும் இச்சவாலான காலப்பகுதியை வைரசை ஒழிக்கும் வகையில் மிக பொறுப்புடன் நடந்துகொள்வது காலத்தின் தேவையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 + = 65

Back to top button
error: