crossorigin="anonymous">
வெளிநாடு

அமெரிக்க விமானப் படை தலிபான்கள் நிலைகள் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான்தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

இப்போது 3 மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில், தலிபான்கள் கைப்பற்றிய ஷெபர்கான் பகுதியை மீட்பதற்கு ஆப்கன் ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க விமானப் படையினர் தலிபான்கள் நிலைகள் மீது பி-52 ரக வெடிகுண்டுகளை வீசியும், ஏசி-10ரக துப்பாக்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். மேலும் தலைநகர் காபுல் பகுதியில் தலிபான்கள் நுழையாத வண்ணம் அமெரிக்க ராணுவத்தின் எப்-16 ரக போர் விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 76 + = 77

Back to top button
error: