crossorigin="anonymous">
உள்நாடுபொது

புதிய சட்ட மா அதிபராக சஞ்ஜய் இராஜரத்னத்தை நியமிக்க நடவடிக்கை

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சஞ்ஜய் இராஜரத்னத்தை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நேற்று (20) நடைபெற்ற பாராளுமன்ற பேரவைக் கூட்டத்திலேயே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாட்டின் அடுத்த சட்டமா அதிபராக பதில் சொலிசிற்றர் ஜெனரலான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னத்தை நியமிப்பதற்கு ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்திருப்பதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் உறுப்பினராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தனவை மீண்டும் நியமிக்க பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்திருக்கிறது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜயந்த சாந்த குமார விக்ரமரத்னவை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை உடன்பாடு தெரிவித்ததாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 1 =

Back to top button
error: