crossorigin="anonymous">
உள்நாடுபொது

45,000 சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று, 14 சிறுவர்கள் உயிரிழப்பு

சிறுவர்கள் மத்தியில் கொவிட்19 வைரசு தொற்று தற்போது வேகமாகப் பரவி வருவதாக, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்தியர் நளீன் கிதுல்வத்த தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரையிலும் பதிவாகியுள்ள கொவிட் தொற்றாளர்களுள் 45,000 பேர் சிறுவர்கள் இவர்களில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் ராஜகிரியவில் வேறு இரண்டு வார்டுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்று காலை வரையிலும் சுமார் 150 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் அதனுடன் நிர்வகிக்கப்படுகின்றன மேலும் இரண்டு வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது மட்டுமல்ல. கடந்த ஒரு வாரமாக, அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள சிறுவர்கள் வார்டுகள் கொரோனா நோயாளர்களினால் நிரம்பியுள்ளன.’ என்று தெரிவித்தார்.

அத்துடன், சாதாரண நோய் அறிகுறிகளைக் காட்டும் கொவிட் தொற்றுள்ள குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை அனைத்து சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதில்லை.

சளி மற்றும் காய்ச்சல் உள்ள சிறுவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வராமல் வீட்டிலேயே கவனித்துக்கொள்வது சிறந்தது. ஆனால், அதிக காய்ச்சல் இருந்தால், சாப்பிடவோ குடிக்கவோ இல்லை என்றாலும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு முதலானவற்றினால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சிறுவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 93 − = 91

Back to top button
error: