இலங்கையில் புத்தம் புதிதாக கடலிலிருந்து பெறப்பட்ட நிலமான கொழும்பு துறைமுக நகரம், “தெற்காசியாவிற்கான நுழைவாயில்” என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று (20) முதல் உத்தியோகபூர்வமாக நாட்டின் முதலாவது சேவை சார்ந்த விசேட பொருளாதார வலயமாக மாறியுள்ளது.
இலங்கை பாராளுமன்றம் நேற்று (20) கொழும்பு துறைமுக நகரத்தை தெற்காசியாவின் முக்கிய உலகளாவிய நிதி மற்றும் சேவை மையமாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டமூலமானது ஒரு ஸ்திரமான கொள்கை சூழலை வழங்குவதுடன், உலகளாவிய ஒப்பீட்டளவில் போட்டித்திறன்மிக்க ஊக்கத்தொகைகளுடன் திறமையான நிர்வாக செயல்முறைகளின் பக்கபலமும் கிடைக்கப் பெறுகின்றது. எனவே, சர்வதேச நிறுவனங்களையும் உள்ளூர் நிறுவனங்களையும் தங்கள் வணிகங்களை கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்கும் உலகளாவிய வர்த்தக வாய்ப்புகளை அடைவதற்கும் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கொழும்பு துறைமுக நரகம் அழைக்கிறது.