கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் அடையாளம் காணப்படாது தேங்கியுள்ள சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் குறித்த சடலங்கள் அடை யாளம் காணப்படாது இவ்வாறு தேங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், வைத்தியசாலைகளின் பிரேத அறையில் தேங்கியுள்ள சடலங்கள் காரணமாக நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் குறைக்கும் நோக்கில் குறித்த சடலங்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்ததை அடுத்து குறித்த சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது.