சீனாவிடமிருந்து இலங்கைக்கு ரூபா 61.5 பில்லியன் (2 பில்லியன் RMB) கடனுதவி வழங்குவது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன இதற்கான உடன்படிக்கையில் இன்று (17) கைச்சாத்திட்டுள்ளதாக, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடு, பொருளாதார மறுமலர்ச்சி, நிதி ஸ்திரத்தன்மை, வாழ்வாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பில் இலங்கைக்கு உதவும் வகையில் குறித்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக, தூதரகம் அறிவித்துள்ளது.