crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்து புதிய சுகாதார வழிகாட்டல்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய சுகாதார வழிகாட்டல்கள் ஓகஸ்ட் 16 முதல் அமுலுக்கு வரும் வகையிலும், ஓகஸ்ட் 31 வரை நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டல்கள்

வீட்டிலிருந்து வெளியேற: ஒருவருக்கு மாத்திரம் அனுமதி (கடமைக்கு செல்லல், சுகாதார சேவைகளை பெற இது பொருந்தாது)

பொது போக்குவரத்து: பஸ், புகையிரதங்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய, மாகாண எல்லைக்குள்

தனியார் வாடகை வாகனங்கள்: கார், முச்சக்கர வண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய, மாகாண எல்லைக்குள்

மின்சாரம், நீர் உள்ளிட்ட பயன்பாட்டு சேவைகள்: அவசியமான குறைந்தபட்ச ஊழியர்களுடன் மேற்கொள்ள அனுமதி, முடிந்தளவில் வீட்டிலிருந்து பணியாற்ற ஆவணை செய்தல்

அரச/ தனியார் அலுவலகங்கள்: நிறுவன தலைவரின் முடிவுக்கு அமைய குறைந்தபட்ச ஊழியர்கள். வெளி மாகாண ஊழியர்களைப்பது, தலைவரின் முடிவின் அடிப்படையிலானது

கூட்டங்கள்/ கருத்தரங்குகள்: அனுமதி கிடையாது

மத தலங்கள்: கூட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை

பொருளாதார மத்திய நிலையங்கள்: மொத்த விற்பனைக்கு மாத்திரம் அனுமதி

பல்பொருள் அங்காடிகள்: ஒரே தடவையில் 25% கொள்ளவின் அடிப்படையில் நுகர்வோருக்கு அனுமதி. (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)

பல் வர்த்தக நிலைய கட்டடத் தொகுதிகள் (Shopping Malls): இன்று முதல் பூட்டு

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் : ஒரே தடவையில் 10% கொள்ளவின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி. (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)

ஆடையகங்கள்: திறப்பு

விவசாய அடிப்படையிலான விடயங்கள்: இறுக்கமான சுகாதார வழிகாட்டலுடன் அனுமதி

பல சரக்கு கடைகள்: ஒரே தடவையில் உச்சபட்சம் 10 பேருக்கு அனுமதி (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)

திறந்த சந்தைகள்: ஒரே தடவையில் 25% கொள்ளவு இடவசதியின் அடிப்படையில் நுகர்வோருக்கு அனுமதி. (உள்ளூராட்சி சபைகளின் இறுக்கமான கண்காணிப்பின் கீழ்)

பேக்கரி/ சிகை அலங்கார நிலையங்கள்/ இலத்திரனியல், மின்சார/ தளபாட/ போட்டோ பிரதி நிலையங்கள்: ஒரே தடவையில் 25% கொள்ளவின் அடிப்படையில் நுகர்வோருக்கு அனுமதி. (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)

கைதிகளை பார்வையிடல்: அனுமதி இல்லை

குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள்: 2 வாரங்களுக்கு பூட்டு

திருமண வைபவங்கள்: ஓகஸ்ட் 17 வரை அனுமதியில்லை

மரண வீடுகள்: 24 மணித்தியாலங்களுக்குள்/ உச்சபட்சம் ஒரே தடவையில் 25 பேருக்கு அனுமதி

நிகழ்வுகள்/ வைபவங்கள்/ கழியாட்டங்கள்: அனுமதியில்லை

தங்குமிட வீடுகள்: முழுமையாக பயன்படுத்தலாம்/ புதிய நபர்களுக்கு அனுமதியில்லை

உடற்பயிற்சி/ உள்ளக விளையாட்டரங்குகள்: ஓகஸ்ட் 18 முதல் பூட்டு

சிறுவர் பூங்காக்கள்/உடல் பிடித்து விடும் நிலையங்கள்/ நீச்சல் தடாகங்கள்: ஓகஸ்ட் 18 முதல் பூட்டு

நடை பாதைகள்: தனித்தனியாக நடப்பதற்கு அனுமதி

கடற்கரை: ஒன்றுகூட அனுமதியில்லை

உணவகங்கள்: 50% ஆசனங்களில் அமர்ந்து உண்ண அனுமதி

ஹோட்டல்/ ஓய்வு இல்லங்கள்/ தங்குமிட இல்லங்கள்: 25% கொள்ளளவின் அடிப்படையில் திறக்க அனுமதி

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 33 = 39

Back to top button
error: