![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/08/bb149-e1629465437544-780x470.jpg)
(ஏ.எஸ்.எம். ஜாவித்)
இலங்கை முழுவதும் கொரோனா நோய் காரணமாக அரசாங்கம் இன்றிரவு (20) முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை மீண்டும் நாட்டை முடக்குவதற்கு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்கள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடித்துக் கொண்டு நீண்ட வரிசைளில் நின்று இன்று மாலை பொருட்களைக் கொள்வனவு செய்ததைக் காண முடிந்தது.
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக தலை நகரில் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகனங்கள் நீண்ட நேரமாக நீண்ட தூரம் வரை காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற வாசகங்களும் தொங்கவிடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்துடன் இதனால் மக்கள் பல அசௌகரியங்களுக்கும் உள்ளானார்கள்.