![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/08/bb157-1-e1629511056559-719x470.jpg)
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் வேட்டையடைப்பு பிள்ளையார் ஆலயம் நேற்று (20) வெள்ளிக்கிழமை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலயத்தில் நேற்று காலை இடம்பெற்ற திருவிழா மற்றும் அன்னாதான நிகழ்வின்போது ஆலய தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை அண்மையில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியினால் 12-08-2021ம் திகதி வெளியிடப்பட்ட வழிபாட்டிடங்களில் கொவிட்-19 சுகாதார நடைமுறைகளை அமுல் படுத்தல் தொடர்பான அறிவித்தல்களுக்குட்படும் குறித்த ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு ஆலயத்தில் நேற்றைய தினம் பூஜை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பூசகர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.