இலங்கையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான யோசனைகளை முன் வைப்பதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரவீர தமது குழுவின் அறிக்கை நிதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனை அடுத்து நிதி அமைச்சருக்கும், அமைச்சரவை உப குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த அறிக்கையை நிதி அமைச்சின் அதிகாரிகள் ஆராய்ந்ததன் பின்னர் அடுத்த அமைச்சரவை சந்திப்பின்போது முன்வைக்கவுள்ளனர்.