crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாகிஸ்தான் இலங்கைக்கு வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை நேற்று (21) அலரி மாளிகையில் சந்தித்து கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான ஒருதொகை வைத்திய உபகரணங்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று சவாலை வெற்றிக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இவ்வாறு வழங்கப்பட்ட வைத்திய உபகரணத் தொகுதியில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 75 செயற்கை சுவாசக் கருவிகள் (ventilators), 150 C-PAP செயற்கை சுவாசக் கருவிகள் என்பன உள்ளடங்கும்.

பிராந்திய மட்டத்தில் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு பங்களிக்கும் விதமாக பாகிஸ்தான் சார்க் கொரோனா வைரஸ் தொற்று அவசர உதவியின் (Pakistan’s SAARC COVID-19 emergency assistance ) கீழ் இந்த வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் இந்நன்கொடைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரு நாட்டிற்கும் இடையிலான இரு தரப்பு உறவை தொடர்ச்சியாக பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 37 − = 29

Back to top button
error: