ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (22) பிற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு, புனித தந்தத்தின் ஆசிர்வாதங்களைப் பெற்றார்.
தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை தியவடன நிலமே நிலங்க தேல அவர்கள் வரவேற்றார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இறுதி ரந்தோலி பெரஹர நேற்று (22) வீதி உலா வந்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் அயோமா ராஜபக்ஷ அம்மையார் ஆகியோர் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பிருந்து பெரஹரவைப் பார்வையிட்டனர்.