crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம்

இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்இ அனைத்து இலத்திரனியல் ஊடகங்களும் ஒன்றிணைந்து ஒளிபரப்பிய விசேட நிகழ்வொன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்தார். ‘ஹுஸ்ம’ என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வை இலங்கை ஒலிபரப்பாளர் மன்றம் ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராசிரியர் நீலிகா மலவ்கே இ டெல்டா வைரஸ் வகையின் திரிபுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஐ டி எச் மருத்துவமனையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவும் கலந்து கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 4

Back to top button
error: