
புத்தளத்தில் கடந்த மாதம் ஜுலை 28ம் திகதி பைசர் (pfizer) முதலாவது கொரோன தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு இன்று (26) வியாழக்கிழமை காலை 8மணி முதல் சாஹிரா தேசிய பாடசாலை, தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம், எருக்கலம்பிட்டி மகாவித்தியாலயம் (நாகவில்லு), கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் போன்ற இடங்களில் செலுத்தப்பட உள்ளது.
கடந்த மாதம் ஜுலை 29ம் திகதி பைசர் (pfizer) முதலாவது கொரோன தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் இந்து கல்லூரியிலும் கல்லடி சிங்கள மகா வித்தியாலயத்திலும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட தடுப்பூசி பெற வேண்டியவர்கள் தாம் முதல் தடுப்பூசி எங்கு பெற்றுக் கொண்டார்களோ அந்த நிலையங்களுக்கு தடுப்பூசி அட்டை மற்றும் அடையாள அட்டையுடன் சமூகம் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .