crossorigin="anonymous">
உள்நாடுபொது

தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாமல்போனவர்களுக்கு முதலாம் டோஸ் தடுப்பூசி

தடுப்பூசியின் முதலாம் டோஸைப் பெற்றுக்கொள்ள முடியாத நபர்கள் காணப்படுவார்களாயின், இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றப்படும் நிலையங்களில் வைத்தே அவ்வாறானவர்களுக்கும் முதலாவது டோஸ் தடுப்பூசியை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை பரிந்துரைகளை முன்வைத்த வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை முக்கியஸ்தர்கள் ஆகியோர், எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டுமென்று, ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுமாயின், உடனடியாக அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்படும் நபர்கள், உரிய மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் வெகு விரைவில் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்புவதாக, ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

கொவிட் நோய்க்கு ஆளாகாத நிலையில் அல்லது வீட்டில் எந்தவொரு நபரும் தனிமைப்படுத்தப்படாத நிலையில் நபரொருவர் உயிரிழப்பாராயின், அவருக்கான இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வது தொடர்பில் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தைத் தொடர்ந்துச் செயற்படுத்துவது தொடர்பிலும், இந்தக் கூட்டத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தொடர்பில் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டங்களை, பிரதேச ரீதியில் அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டுமென்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன்போது எடுத்துரைத்தார்.

இக்ககூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சிசிர ஜயகொடி, ஷன்ன ஜயசுமன, ஜனாதிபதியின் தலைமையில் ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, பாதுகாப்புப் பணிக் குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள், கொவிட் ஒழிப்புச் செயலணியின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 6 =

Back to top button
error: