ஆஃகானிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி
ஆஃகானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து ஞாயிறன்று அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
ஆனால், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிய கிளையுடன் தொடர்புடைய ஒருவர் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்கா ராணுவம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சட்ட விரோதமானது என்று தாலிபன் அறிவித்துள்ளது. தாக்குதலின்போது அருகேயிருந்த அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.
கொல்லப்பட்டவர்களில் சிலர் சர்வதேச அமைப்புகளில் பணியாற்றியவர்கள். சிலரிடம் அமெரிக்கா செல்வதற்கான விசா இருந்திருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் மிகவும் இளம் வயதுடைய குழந்தை இரண்டு வயது சுமையா. அதிக வயதுடைய குழந்தை 12 வயதான ஃபர்சாத்.
“இது தவறு. கொடுரமான தாக்குதல். தவறான தகவலின் அடிப்படையில் இது நடத்தப்பட்டுள்ளது” என்றார் உயிரிழந்தவர்களின் உறவினரான ரமீன் யூசுஃபி.
கொல்லப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை சுமையா, தனது மகள் என்று இமால் அகமதி பிபிசியிடம் தெரிவித்தார். அமெரிக்காவுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருப்பதாகவும், விமான நிலையத்துக்குச் செல்வதற்கான தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கப் படைகளுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய நாசர் என்ற மற்றொரு உறவினரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அகமதி கூறினார் (பிபிசி