crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாணத்தில் அரசின் கட்டுப்பாட்டு விலையில் சீனி விற்பனை

அரசின் கட்டுப்பாட்டு விலையில் காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் சீனி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சீனி போன்றவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை அரச வர்த்தமானிமூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு கிலோ 128 ரூபாவிற்கு இன்று (03) விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் முயற்சியால் பெற்றுக் கொள்ளப்பட்ட 60 ஆயிரம் கிலோ சீனி இம்மாகாணத்திலுள்ள மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களங்களுக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கல்முனை பிராந்தியங்களுக்கு தலா 15 ஆயிரம் கிலோ சீனி பகிர்தளிக்கப்பட்டிருந்தன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற 15000 கிலோ சீனியை அதன்கீழியங்கு 16 கூட்டுறவு சங்கங்களுக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு கிடைக்கப் பொற்றிருந்த 500 கிலோ சிவப்பு சீனி பொதி செய்யப்பட்டு நுகர்வோருக்கு தலா ஒருகிலோ வீதம் 128 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 60 − = 59

Back to top button
error: