இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (03) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 6 ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படவிருந்த தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு இம்மாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் நடைமுரைப்டுத்தப்படவுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, செப்டெம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின்போது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.