இலங்கையில் வைத்தியர்களின் அனுமதி கிடைத்ததன் பின்னர் உடனடியாக பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொலைக்காணொளி ஊடாக இன்று (03) இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது, தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 20 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளாந்தம் 400 – 450 தடுப்பூசி மையங்கள் ஊடாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், சுகாதார பிரிவின் பரிந்துரைக்கமைய குறித்த மையங்கள் ஊடாக செலுத்தப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது.