மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாடும் தீவிர சோதனையும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் மாவட்ட மக்களால் முழுமையாக கடைப்பிடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பிதமாகியுள்ளது.
அரசாங்கத்தினால் நேற்றிரவு 11 மணிமுதல் அமுல் படுத்தப்படும் பயணக் கட்டுப்பாட்டு நடைமுறை மட்டக்களப்பு மாவட்ட மக்களால் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. நகரங்களில் படையினரும் பொலிசாரும் கடுமையான சோதனை நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் யாவும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துச் சேவைகளும் இடம் பெறவில்லை.
பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரதான நகரங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயல் இழந்துள்ளதுடன் வீதிகளும் வெறி ச்சோடிக் காணப்படுகின்றன.
இவ்வாறாக அரசினால் அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைப்பிடிப்பார்களேயாயின் மிக விரைவில் மாவட்டத்தையும் நாட்டையும் விட்டு கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும் என்பதே சுகாதாரத்துறையினரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.