
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் தயாரித்த முதலாவது சேலைன் தொகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் கண்டி பல்லேகல கைத்தொழில் பேட்டையில், தனியார் நிறுவனம் ஒன்றும், அரச மருந்தகக் கூட்டுத்தாபனமும் இணைந்து இந்த சேலைன் தயாரிப்பை ஆரம்பித்துள்ளன.
மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் உத்பல இந்திரவன்ச இந்த சேலைன் தொகையை ராஜாங்க அமைச்சரிடம் நேற்று (06) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
நாட்டின் வைத்தியசாலைகளுக்கு தேவையான சேலைன் வகைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கடந்த காலங்களில் தோல்வி கண்டமை குறிப்பிடத்தக்கது.