![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/09/bb371-e1631196518917-780x470.jpg)
இலங்கையில் தற்போதைய கொவிட்19 தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு. கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்கள் முடியுமானால் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்திக் கொள்வது சிறந்தது என்று மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தப்பத்து தெரிவித்தார்.
கொவிட் வைரசு நாளுக்கு நாள் வீரியமடைந்து புதிய பிறழ்வுகள் உருவாகின்றமையை கருத்திற்கொண்டு தான் இந்தக் கோரிக்கையை விடுப்பதாக, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஒரு வருடத்திற்குள், பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதன் ஊடாக கொவிட் நோய் தொற்று குறித்த புதிய தகவல்களை கண்டறிய முடியும் என்றும் என்று மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தப்பத்து தெரிவித்தார்.