இலங்கையில் தற்சமயம் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட உள்ளதோடு அன்றைய தினம் இரவு பதினோரு மணிக்கு மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.
பொது மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே இந்த பயணக்கட்டுப்பாட்டில் அன்றைய தினம் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.
மக்களின் நலன் கருதி அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி கூறினார். அரசாங்கம் வழங்கும் சலுகைகளை இந்த சந்தர்ப்பத்தில் துஸ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்ததுடன் ,அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளாரர்.
நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னரும் வார இறுதி நாட்களில் தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதா இல்லையா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்று கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.