இலங்கை பூராகவும் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் நேற்று (10) முதல் திறக்கப்படுகின்றன என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் நிலையங்கள் திறக்கப்படுவதாக அவர் கூறினார். அதன்படி, நேற்று முதல் ஏழு நாட்களுக்கு தபால் நிலையங்கள் திறந்திருக்கும்.
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் செப்டம்பர் மாத ஓய்வூதியங்கள் இன்று முதல் செலுத்தப்படும். அத்துடன் முதியோர் உதவித்தொகை, விவசாயிகளின் ஓய்வூதியம் மற்றும் மீனவர் ஓய்வூதியத்தை செலுத்துவதற்காகவும், தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.