(அப்துல்சலாம் யாசீம்)
பிறந்து ஆறு நாட்களில் கை விடப்பட்ட குழந்தை திருகோணமலை சிறுவர் இல்லமொன்றில் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் அக்குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டடு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அக்குழந்தை கடந்த ஒன்பது நாட்களாக கந்தளாய் கொரோனா தொற்று சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று 13ம் திகதி அக்குழந்தைக்கு சரியாக பதினோரு மாதம் என வைத்தியசாலை அனுமதி அட்டையில் பதிவிடப்பட்டுள்ளது
இக் குழந்தையின் நலனில் அக்கறை கொண்ட கந்தளாய் கொரோனா வைத்தியசாலை ஏழாம் வாட்டுக்கு பொறுப்பான தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு காது குத்தும் விழாவை மிகவும் குதூகலமாக கொண்டாடியதாக தெரியவந்துள்ளது.
கந்தளாய் கொரோனா தொற்று சிகிச்சை வைத்தியசாலை ஏழாம் வாட்டு தாதிய உத்தியோகத்தர்களின் இச்செயற்பாட்டை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றவர்களும் பார்த்து மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.