இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் தபால் சேவைகள் இடம்பெறவுள்ளதுடன் தபால் நிலையங்களும் செயல்படவுள்ளன.
ஆரம்பத்தில் இந்த சேவையை வாரத்திற்கு ஆறு நாட்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததுடன் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கொவிட் பரவலை கருத்தில் கொண்டு நான்கு நாட்களுக்கு சேவையை மட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தபால் அலுவலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளை எதிர்வரும் 17ஆம் 18ஆம் திகதிகளில் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டு இருக்கும்.