இலங்கை “வக்பு சட்டங்கள் மற்றும் சமகால விடயங்கள்” எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண உலமாக்கள் மற்றும் இமாம்களுக்குமான பயிற்சிக் கருத்தரங்கு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று (13) நடைபெற்றது
இக் கருத்தரங்கில் சுமார் 250க்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்து கொண்டனர். இதில் வளவாளர்களாக இலங்கை வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் அவர்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பான தரவு விஞ்ஞானி, பேராசிரியர் ரஸீன் பாப்பு அவர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உதவித் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹாலிக் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் எம்.எல்.எம். அன்வர் அலி அவர்களின் ஏற்பாட்டில் மற்றும் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் அவர்களது ஒருங்கிணைப்பில் குறித்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஏனைய மாகாணங்களின் உலமாக்கள் மற்றும் இமாம்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு பி.ப 4.00 முதல் பி.ப 6.30 வரை பின்வரும் ஒழுங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது;
• மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் : 2021 செப்டம்பர் 15 (நாளை)
• வடமேல் மாகாணம்: 2021 செப்டம்பர் 18
• வடமத்திய மாகாணம்: 2021 செப்டம்பர் 20
• ஊவா, தெற்கு மற்றும் வட மாகாணங்கள் : 2021 செப்டம்பர் 22
• மேல் மாகாணம் : 2021 செப்டம்பர் 25