இலங்கையில் சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக பாடசாலைகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று (15) சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலாந்துரையாடலில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இந்த பாடசாலைகளை அடுத்த மாத ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை வகுக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றப்படாத பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவோருக்கும் விரைவில் தடுப்பு ஊசி ஏற்றப்படும் என அவர் குறிப்பிட்டார்.