crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கலினால் பரிசோதனை கருவி, தொற்று நீக்கி அன்பளிப்பு

மட்டக்களப்பு மாவட்ட கொவிட்19 தடுப்பு செயலணியினால் மட்டக்களப்பில் வேகமாக பரவிவருகின்ற கொறோனா தொற்றை தடுக்கும் முகமாக அவசர தேவையாக காணப்பட்ட பரிசோதனை கருவிகள் மற்றும் தொற்று நீக்கி கருவிகளை (Hydrogen peroxide vaporizer, Nocolyse) தொழிலதிபர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வந்து பெற்றுக்கொடுத்துள்ளனர்.

மாவட்ட செயலகத்தில் கொவிட்19தடுப்பு செயலணியின் முன்னிலையில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் தொழில் அதிபர்களான தேசபந்து மு.செல்வராஜா, வீ.ரஞ்சிதமூர்த்தி, ஜே.ஜெகதீசன் மற்றும் எஸ்.யோகேஸ்வரன், கே.செல்வநாயகம் மற்றும் பி.சாந்தகுமார் ஆகியோர்களால் மேற்படி உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட கொவிட்19 தடுப்பு செயலணியின் இராணுவத் தரப்பு பிரதானி மேஐர் ஜெனரல் கொஸ்வத்த, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கட்டளைத் தளபதி (மட்டக்களப்பு) பிரிக்கேடியர் விஜித கெட்டியாராச்சி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பரிசோதனை கூட பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி தேவகாந்தன் மற்றும் வைத்திய கலாநிதி சுந்தரேசன் , ஏனைய சிரேஸ்ட சுகாதார அதிகாரிகளின் பங்குபற்றலோடு இடம்பெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 6 =

Back to top button
error: