அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதி பணிப்பாளர் நாயகமாக திரு. மிலிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக்கடிதத்தை திரு. மிலிந்த ராஜபக்ஷவிடம் வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று (21) கையளித்தார்.
இது தொடர்பான நிகழ்வு வெகுஜன ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ. விஜேவீர அரச தகவல் பணிப்பாளர் திரு .நாயகம் மொஹான் சமரநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அமெரிக்க மயாமி பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி ஊடகம் தொடர்பான முதுகலை பட்டதாரியாவார். முகாமைத்துவம் தொடர்பான பட்டத்தை பெற்ற திரு.மிலிந்த ராஜபக்ஷ அமெரிக்க மயாமி பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி ஊடகம் தொடர்பான முதுகலை பட்டதாரியாவார்.
ஜக்கிய நாடுகள் அமைப்பின் ஆசிய பசிபிக் வலயத்தின் கொள்கை ஆய்வாளர் .பிள்ளைகள வளர்ப்பு தொடர்பான சர்வதேச அமைப்பின் தெற்காசிய பிராந்திய இளைஞர் பிரிவின் பிரதானியாகவும் பணியாற்றியுள்ளார்.
2011 ஆண்டு தொடக்கம் தேசிய இளைஞர் சேவை அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ள திரு மிலிந்த ராஜபக்ஷ சர்வதேச இளைஞர் மகாநாட்டின் ஏற்பாட்டுக்குழுவின் இணை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
குருநாகல் மலிய தேவ ஆண்கள் வித்தியாலயத்தின் பழைய மாணவருமன இவர் தொடர்பாடல் மூலோபாயம் குறித்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றில் ஆலோசராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.