2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறிக்கப்பட்ட சான்றிதழை எதிர்வரும் திங்கட்கிழை முதல் இணையதள்த்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.
நேற்றைய தினம் வெளியிடப்ட்ட 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் பெற வேண்டி இருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, 011 2 784 208, 011 2 784 537, 011 3 140 314 அல்லது 1911 என்ற ஹொட்லைன் இலக்கத்தின் ஊடாக அழைப்பதன் மூலம் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களின் ஊடாக பரீட்சார்த்திகளின் சரியான பரீட்சை எண்ணை உள்ளிட்டு பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்படாவிட்டாலும், பாடசாலை மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் உயர் தரம் கற்பதற்காக 75.1 சதவீத மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 231,458 .
இந்த மாணவர்கள் உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.மொத்த பரீட்சார்திகளுள் 236,053 பேர் அதாவது 73.6 சதவீதமானோர் உயர் தரத்திற்கு தகுதிபெற்றுள்ளனர்.அழகியல் பாடநெறிகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர், இவற்றில் சிறுசிறு மாற்றங்களே ஏற்படக்கூடும்.
இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு, 4,513 பரீட்சை நிலையங்களில், 622,352 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
நாட்டில் நிலவுகின்ற கொவிட் தொற்று சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டு, அழகியல் பாடங்களில் செயல்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை. அந்தப் பாடத்தின் பெறுபேறுகளை தவிர ஏனைய பாடங்களின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன..
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அழகியல் பாடங்களின் நடைமுறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அந்த மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் பெறுபேறுகள் வழங்கப்பட உள்ளன.
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளின் பெறுபேறுகளும் சம்பந்தப்பட்ட அதிபர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்தார்.