crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரஷ்யாவிற்கான புதிய தூதுவர் பேராசிரியர் ஜனிதா பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பு

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே அவர்கள் (28) இன்று அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து தனது பணிகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார்.

தனது சேவையைப் பொறுப்பேற்பதற்கு ரஷ்யாவிற்குப் புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக, சேவை தொடர்பாகத் திட்டமிடும் வகையிலும் பிரதமருடனான அவரது இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான வரலாற்று நட்பை நினைவுகூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு திருமதி. ஜனிதா ஏ லியனகே அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே அவர்கள் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, கம்பஹா விக்ரமாராச்சி சுதேச பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பணியாற்றினார்.

காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவியான ஜனிதா ஏ லியனகே அவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவராகவும் முன்னர் சேவையாற்றியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 − = 19

Back to top button
error: